Breaking News

புத்தளத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் ஜேவிபி தலைவர்

"சீரழியும் தேசத்தைக் கட்டியெழுப்பும் தீர்வு" என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி (NPP) நாடு தழுவிய ரீதியில் நடத்தும் 'கலந்துரையாடல் சார்ந்த மக்கள் சந்திப்பு' தொடரின் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான அமர்வு, தேமச தலைவர் தோழர் அனுர குமார திசாநாயக்க (தலைவர் - ஜேவிபி) தலைமையில் 2022.01.15 மாலை 2.30 முதல் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றது.


புத்தளம் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த புத்தளம் நகரம், முல்லிபுரம், மணல்தீவு, சிராம்பியடி, வண்ணாத்திவில்லு, கரைத்தீவு-பொன்பரப்பி, கல்பிட்டி, அக்கரைப்பற்று, மதுரங்குளி, முந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சமுகமளித்திருந்தனர்.


வரவேற்புரையை தோழர் நிமல் பதிரன (ஜேவிபி - புத்தளம் தொகுதி அமைப்பாளர்) நிகழ்த்தினார். பேராசிரியர் சந்தன அபேரத்ண (தேமச - புத்தளம் மாவட்ட அமைப்பாளர்) தேமசயின் தீர்வுத் திட்டம் பற்றிய அறிமுகத்தை வழங்கினார். 


அதனைத் தொடர்ந்து தோழர் அனுர திசாநாயக்க அவர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது. சமுகமளித்தவர்கள் வினவிய சந்தேகங்களுக்கு விளக்கங்களை வழங்கினார்.


இவ்வுரைகளின் சிங்கள தமிழ் மொழிமாற்றத்துடன் நிகழ்ச்சித் தொகுப்பினை தோழர் ஹிஷாம் ஹுஸைன் (ஜேவிபி - புத்தளம்) மேற்கொண்டார்.


NPP JVP mission2025








No comments