Breaking News

மதுரங்குளி - கனமூலையில் "தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையம் திறப்பு விழா"!.

கனமூலை  தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் "தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையம்" (Darussalam Medical Center)  திறப்பு விழா எதிர்வரும் 06/01/2022 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் கனமூலை பெரிய பள்ளிக்கு அருகாமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.


இந்நிகழ்வு தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். முஸ்ஸம்மில் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண கூட்டுறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வன்னிநாயக்க ஜயபத்மா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.





No comments