கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அஸ்ரின் அலாவுதீன் 600,000/= நிதி ஒதுக்கீடு!
"கிராமத்தின் ஒன்று கூடல்" திட்டத்தின் கீழ் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு முப்பது இலட்சம் ரூபா வீதம் அரசினால் வழங்கப்படுகின்றது. அத்திட்டத்தின் கீழ் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன் அவர்களின் புதல்வர் அஸ்ரின் அலாவுதீன் தனக்கு கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் உள்ளக பாதை அபிவிருத்திற்காக (6,00 000/=) ஆறு இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 6,00 000/= இலட்சம் ரூபா முந்தல் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற்று அதற்கான பூர்வாங்க வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அஸ்ரின் அலாவுதீன் அவர்களுக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோர் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
No comments