சம்மாந்துறை SLMC Str இளைஞர் காங்கிரஸுக்கு இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தி.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இளைஞர்களை இணைக்கும் ஓர் அங்கமாக Slmc str இளைஞர் காங்கிரஸ் கடந்த 23-12-2016 இல் ஆரம்பிக்கப்பட்டது..
ஏழு உறுப்பினர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் இன்று நூற்றுக்கணக்கான இளைஞர்களின் ஆதரவுடன் வெற்றி நடை போடுகிறது.
மாண்புமிகு தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் முழு ஆசிர்வாதத்துடன் கட்சியின் செயற்பாடுகளில் முழு ஈடுபாட்டுடன் இயங்குவதோடு புதிய இளைஞர்களை இணைப்பதில் முழு பங்கை வகிக்கிறது.
சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் உயிர்த்துடிப்புள்ளதாக உள்ளது இதற்கு எமது இளைஞர்களே காரணம்.
இந்த இளைஞர் காங்கிரஸை வளர்க்க பல மூத்த போராளிகளின் தியாகம் மறக்க முடியாது.இதன் பெறுமை அவர்களையும் சாரும்.
எமது இளைஞர் காங்கிரஸ் தேர்தல் காலத்தில் மாத்திரம் செயற்படாமல் தேர்தல் அல்லாத காலத்திலும் செயற்படுகிறது இதில் பல கற்ற பல்கலைகழக மாணவர்கள் பல துறைகளில் சாதனை படைத்த பல இளைஞர்கள் உள்ளனர்.
இதன் ஓர் கிளையாக "Slmc str பல்கலைகழக மாணவர் ஒன்றியம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளது பல்கலைகழக மாணவர்களை கட்சியில் இணைப்பதோடு அவர்களுக்கு உயர்கல்விக்காக உதவும் நோக்காக உள்ளது.
இன்னும் எமது இளைஞர் காங்கிரஸுக்கு பல இளைஞர்களை இணைக்க உள்ளோம் இளைஞர்கள் வந்து இணைந்து கொள்ள முடியும்.
ஹாதிக் இப்றாஹிம் ஸ்தாபக தலைவர் Slmc str இளைஞர் காங்கிரஸ் சம்மாந்துறை.
No comments