மதுரங்குளியில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!
மதுரங்குளியில் புதிய பொலிஸ் நிலையம் நேற்று (10) மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தை வடமேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்ம ரத்தின திறந்து வைத்தார்.
புத்தளம் மாவட்டத்தில் முந்தல் மற்றும் மஹகும்புக்கடவல ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட முக்குத்தொடுவா, கந்தத்தொடுவா, பாலசோலை, கடையாமோட்டை, கனமூலை வடக்கு, கனமூலை தெற்கு, புபுதுகம, மதுரங்குளி, வேலுசுமனபுர, வீரபுர, புழுதிவயல், விருதோடை, நல்லந்தளுவை ஆகிய 13 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்நிலையம் அமைந்துள்ளது.
இந்நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கே.கே.ஜீ. விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments