Breaking News

அஷ்ஷெய்க் அரூஸ் (கபூரி) அவர்களின் ஞாபகார்த்த கேட்போர் கூட கட்டிடத்திற்கான ஸதகா நிதி அன்பளிப்பு

பு/கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மர்ஹும் அஷ்ஷெய்க் அரூஸ் (கபூரி) பெயரில் நிர்மாணிக்கப்படவிருக்கும் கேட்போர் கூட கட்டிட நிர்மாணப் பணிக்காக கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவியர் சங்க செயற்குழுவினால்  481,500/= ரூபா நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிதி அன்பளிப்பினை 02.12.2021 திகதியன்று பழைய மாணவியர் சங்க செயற் குழுவினால் பாடசாலை அதிபரினூடாக கேட்போர் கூட நிர்மாணிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் கணமூலை பெரிய பள்ளி நிர்வாக குழுவிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். ராசிக் மற்றும் பிரதி அதிபர் பீ.எம். முஸ்னி, பெரிய பள்ளி தலைவர் என்.எம்.ஏ.பஸீர் மற்றும் பேஸ்  இமாம் அஷ்ஷெய்க் அன்பாஸ் (ஹிழ்ரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.


இவ்வன்பளிப்பானது கணமூலை பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக பழைய மாணவியர் சங்கம் பெருந்தொகை பணம் அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்பஸ் லத்தீப்






No comments