Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் முகாமைத்துவ குழு அலிசப்ரி ரஹீம் எம்.பி. யுடன் சினேகபூர்வ கலந்துரையாடல்.

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் தலைமையிலான முகாமைத்துவ குழு நேற்று (5) அலி சப்ரி எம்.பி யுடன் சினேகபூர்வ சந்திப்பு!


பாடசாலையின் குறைபாடுகள் சம்பந்தமான மகஜர் எம்.பி யிடம் கையளிப்பு!


இம்மாத இறுதிக்குள் கடையாமோட்டை தேசிய பாடசாலையின் முகப்பு, மற்றும் உள்ளக வீதி அமைப்பதற்கு நிதி ஒதுக்க பா.உ. வாக்குறிதியளிப்பு!. 


பாடசாலையில் வறுமை கோட்டின் கீழ் கல்வி கற்கும் 200 மாணவர்களுக்கு புத்தகப்பை (BAG) தருவதாகவும்,


அடுத்தாண்டில் பாடசாலைக்கு  ஒரு கட்டிடத்தை பெற்றுத்தருவதாகவும்,


அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டில் பாடாசாலை சுற்றுமதில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் பா.உ. வாக்குறுதியளிப்பு!.


பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.தௌபீக் தலைமையிலான முகாமைத்துவ குழுவினர் நேற்று (05) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களை அவரது காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது பாடசாலையின் குறைபாடுகள் சம்பந்தமான மகஜரை கையளித்தனர்.


இக்கலந்துரையாடலின் போது பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் முன் வைக்கப்பட்ட போது இம்மாதம் நிறைவடைய முன்னர் பாடசாலையின் முகப்பு, மற்று உள்ளக வீதி அமைப்பதற்கான நிதியை தனது நிதி ஒதுக்கீட்டில் வழங்குவதாகவும், பாடசாலையில் வறுமை கோட்டின் கீழ் கல்வி கற்கும் சுமார் 200 மாணவர்களுக்கு புத்தகப்பை (BAG) தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.


இதேவேளை பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்கான மதிப்பீட்டறிக்கையை தருமாறு பணித்ததோடு எதிர்வரும் ஆண்டில் அதற்கின நிதியை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.








No comments