அகில இலங்கை சமாதான நீதவானாக ராசிக் முகம்மது றிஸ்லி சத்தியப்பிரமாணம்
மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவின் எருக்கலம்பிட்டி கிராமத்தை பிறப்பிடமாகவும், தற்பொழுது புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவின் நாகவில்லு கிராமத்தில் வசித்து வரும் ராசிக் முகம்மது றிஸ்லி என்பவர் அகில இலங்கை சமாதான நீதிவானாக 2021.12.23ம் திகதி வியாழக்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக மாவட்ட நீதவான் ஏ.எஸ்.அசேல த சில்வா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரை பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம் (நவோதயா) பாடசாலையில் கல்வி கற்றார்.அத்துடன் தொழிற் பயிற்சி நிலையம், நாகவில்லுயில் 6மாத கால கணணி பயன்பாட்டு உதவியாளர் பாடநெறியை பூர்த்தி செய்த இவர், இலங்கையில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலை (அரசியல் விஞ்ஞானம்) 3வருட பட்டப்படிப்பினையும் 2018ம் ஆண்டு பூர்த்தி செய்தார்.
மேலும் சமாதான நீதிவானின் தகுதியாக 30வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். ஆகவே இவர் தனது "31வயதில் சமாதான நீதிவானாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம், மிக இளம் வயதில் சமாதான நீதிவானாக" தெரிவு செய்யப்பட்டவராக சிறப்பம்சம் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்திலும், தற்பொழுது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமைக் காரியாலத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்.
இவர் மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தை சேர்ந்த அல்ஹாஜ் மீராசாஹிபு முகம்மது ராசிக் மற்றும் அல்ஹாஜ் ராசிக் சகுதூனா ஆகியோரின் இளைய புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments