கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் 3,00 000/= ரூபா நிதி ஒதுக்கீடு
பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையில் நீண்ட காலமாக காணப்பட்ட குறைபாடான பிரதியிடும் இயந்திரம் (Photo Copy Machine) போதாமை காரணமாக பாடசாலையின் ஆசிரியர் குழாம் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்காரிடம் வேண்டுகோளை முன்வைத்தனர்.
ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து பிரதியிடும் இயந்திரம் (Photo Copy Machine) கொள்வனவு செய்வதற்காக பிரதேச சபை உறுப்பினர் பைஸர் மரிக்கார் 3,00 000/= மூன்று இலட்சம் ரூபா முந்தல் பிரதேச செயலகத்திற்கு அந்நிதியை பெற்றுக் கொடுத்துள்ளார். அதற்கான பூர்வாங்க வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்காருக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை விஞ்ஞான அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோர் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
K.M.C.C. (N.S) MEDIA UNIT
29/12/2021
No comments