கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றிஸ்வி 12,00 000/= ரூபா நிதி ஒதுக்கீடு
"கிராமத்தின் ஒன்று கூடல்" திட்டத்தின் கீழ் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு முப்பது இலட்சம் ரூபா வீதம் அரசினால் வழங்கப்படுகின்றது. அத்திட்டத்தின் கீழ் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றிஸ்வி தனக்கு கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு (12,00 000/=) பன்னிரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளார்.
அவர் ஒதுக்கீடு செய்த (12,00 000/=) பன்னிரண்டு இலட்சம் ரூபா நிதியில் கரப்பந்தாட்ட மைதானம் புனரமைப்பு செய்வதற்கு (7,00 000/=) ஏழு இலட்சம் ரூபாவும், தளபாட கொள்வனவிற்காக 5,00 000/= ஐந்து இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 12,00 000/= இலட்சம் ரூபா முந்தல் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற்று அதற்கான பூர்வாங்க வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றிஸ்வி அவர்களுக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை விஞ்ஞான அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோர் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
K.M.C.C. (N.S) MEDIA UNIT
30/12/2021
No comments