புத்தளம் மக்களின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?
புத்தள பிரதேசத்தில் நீண்ட காலமாக காணப்படும் வெள்ள நீர் வெளியேற்றத்துக்கு தீர்வு இன்மையால் புத்தளம் அனுராதபுர வீதியில் (ரயில்வே கடவையை மறித்து) (30) இன்று ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
புத்தளம் நகரில் அமைந்துள்ள நூர்நகர்,கடையாக்குளம், மணற்குன்று உட்பட இவற்றை சூழ்ந்துள்ள குடியிருப்பு மக்கள் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக முன்வைக்கும் கோரிக்கை முறையான வடிகால் அமைப்பும், நிலையான வீதிகள் மாத்திரமே.
ஆனால் தற்போதைய பெருவெள்ளம் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் வெள்ளம் நிலையாக தேங்கியுள்ளது.
இக்குடியிருப்பு மக்கள் பொறுமையை கைவிட்டு வீதியில் இறங்கி போராட துணிந்து விட்டார்கள்.
பொதுமக்களுடன் இனைந்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், ஐ.தே.கட்சியின் புத்தளம் மாவட்ட முகாமையாளர் மோசஸ் ஜேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏ.சீ.எம். சபீர்.
No comments