Breaking News

ஈஸ்டர் தின தாக்குதல் பொறுப்புக்களை என்னால் ஏற்க முடியாது- புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன

ஈஸ்டர் தினத்தில் ஏற்படப்போகும் தாக்குதல் சம்பந்தமாக ஏப்ரல் 4 ஆம் திகதியும் அதன்பின் ஏப்ரல் 20 ஆம் திகதி பி.ப 4.53 மணிக்கும் கிடைத்த தகவல்களை முன்னாள் பொலிஸ் மா அதிபர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு வழங்கினேன்.


அதே போன்று ஏப்ரல் 20 ஆம் தேதி எனது தகவல் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் கரிசனை காட்டாமை குறித்து பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி மூலம் அறிவித்தேன்.


சஹ்ரானின் மனநிலையைப் பற்றி என்னால் அறிய முடியாது அதனால் எனக்கு கிடைத்த தகவல்களை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளேன்.


இவ்விடயமாக  தாக்குதல்களை தடுத்து நிறுத்த மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையின் பாதிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் இன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது கேட்கப்பட்ட குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.





No comments