Breaking News

பந்து வீச்சுக்கு முன் வாய்வீச்சு

T20 உலகக் கிண்ணத்தின் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.


போட்டி நடைபெற முன்னரே இரு நாடுகளுக்கிடையில் வாய்ச் சவடால் வாய் வீச்சு இடம் பெற்று வருகிறது இதனால் போட்டியின் ஒவ்வொரு பந்தும் உயிரோட்டமுள்ளதாக இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் தேசிய கொள்கைக்கு மாற்றமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாகிஸ்தான் கிரிக்கட் விளையாட்டையும் பயங்கரவாத விளையாட்டையும் ஒருமித்து விளையாடுவதாகவும் இந்து தீவிரவாத குருவான நேரு ராம்தோவ் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இரு அணி வீரர்கள் மட்டுமன்றி இளைப்பாறிய கிரிக்கட் ஜாம்பவான்கள் கூட ஏட்டிக்குப் போட்டியாக கருத்துக்களைக் கூறி வருவதனால் கிரிக்கட் இரசிகர்கள் மத்தியிலும் இது வியாபித்து இருப்பதை காண முடிவதாக கிரிக்கட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.




No comments