Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் 2006 ஆம் ஆண்டு O/L BATCH வகுப்பு மாணவர்களால் உள்ளக பாதை அபிவிருத்தி

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசி பாடசாலை) யில் 2006 ஆம் ஆண்டு க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களால் பாடசாலையின் உள்ளக கொங்ரீட்  (100x10)  பாதை அமைத்துத்து கொடுக்க முன்வந்துள்ளனர்.


இதன் அங்குரார்பண நிகழ்வு  இன்று (24) கல்லூரியின் அதிபர் எம்.எச்.தௌபீக் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இணைப்பு செயலாளரும், பொது ஜன பெரமுனவின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம். றியாஸ் அவர்களும் முந்தல் மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவரும், பாடாசாலை அபிவிருத்தி சங்க செயலாளருமான ஏ.எச்.எம். ஹாரூன், விஞ்ஞான அபிவிருத்தி குழு செயலாளர் சீ.எம். தாவூத் மற்றும் ஆசிரியர் குழாம், 2006 ஆண்டு (O/L )BATCH வகுப்பு மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இப்பாடசாலையில் உள்ளூர் தனவந்தர்களும், ஒவ்வொரு வருட மாணவர்களும் பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியில் இவ்வாறு பங்களிப்பு செய்வது பாடசாலையின் பாரியதொரு  பௌதீக வளர்ச்சியை காட்டுவதுடன், பாடசாலையின் மீது அக்கரை கொண்ட சமூகத்தினால் கட்டியெழுப்பப்படுவதை பலரும் மெச்சக் கூடிய வகையில் காணப்படுகின்றது.


இவ்வாறு ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் வகுப்பு  ரீதியாக வேலைத்திட்டங்களை செய்வது இப்பிராந்தியத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், குறுகிய காலத்தில் இப்பாடசாலை நிறைய பௌதீக வளங்களை தன்னிடத்தில் காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து கொண்டதையும் கல்வி புலம்சார் துறையினர் இப்பிரதேசத்தை மெச்சக் கூடிய வகையிலும், இப்பாடாசாலை பழைய மாணர்களின் முன்மாதிரியான செயற்பாட்டை பாராட்டி  பெருமிதம் கொள்கின்றார்கள்.


பாடசாலையில் அமைக்கும் கொங்ரீட் பாதையானது நீளம் 100 அடியும், அகலம் 10 அடியும் கொண்ட சுமார் 150,000/= ரூபா பெறுமதியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


2006 ஆண்டு O/L BATCH  மாணவர்கள் விபரம்


1️⃣.    A.M.Mubeen           

2️⃣.    S.S.M.Salman          

3️⃣.    M.M.Fasal                   

4️⃣.    N.M.Masooth               

5️⃣.    M.M.Murshid

6️⃣.    R.M.Naseeth.            

7️⃣.     A.G.M.Ilham   

8️⃣.    J.M.Faslim                 

9️⃣.    S.Satham          

🔟.    A.C.M.Sifan.                

1️⃣1️⃣. I.Israth  Ali.         

1️⃣2️⃣. M.S.M.Musahir.              

1️⃣3️⃣.M.S.M.Musamil.       

1️⃣4️⃣.  S.M.Arsath.          

1️⃣5️⃣. Niraj. (Marhoom)    

1️⃣6️⃣. R.B.Faleel.

1️⃣7️⃣.K.R.M.Kamil.


K.M.C.C.(N.S.) MEDIA UNIT










No comments