கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் வீட்டுக்கு வீடு குழாய் நீர் கிணறு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 1000 கிணறுகள் வழங்கி வைப்பு
கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் வீட்டுக்கு வீடு குழாய் நீர் கிணறு எனும் தொனிப்பொருளில் செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டம் அடையாளப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகளை சகல கிராமங்களுக்கும் வழங்கி சிறப்பான ஒரு சமூக சேவையினை கல்முனை ரஹ்மத் சமூகசேவை அமைப்பினர் செய்து வருகின்றனர்.
கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் எண்ணக் கருவில் உருவான வீட்டுக்கு வீடு குழாய் நீர்க்கிணறு வேலைத்திட்டம் மிகவும் செம்மையாக எமது பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றது.
இவ் வேலைத் திட்டத்துக்கு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்புடன் இணைந்து முழு உதவி மற்றும் ஒத்தாசைகளை வழங்கிக் கொண்டிருக்கும் YWMA நிறுவனத்துக்கு கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தனது விஷேட நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இவ்வேலைத் திட்டமானது சகல தேவை உடையவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தற்போது 1300 மேற்பட்ட கிணறுகளை வழங்கி வருகின்றது.
இந்த குழாய் நீர் கிணறு வழங்கும் வேலைத்திட்டம் மென்மேலும் பல இடங்களுக்கும் விருத்தியடைய வல்ல இறைவனை பிரார்த்திக்குமாறும் பிரதிமுதல்வர் வேண்டிக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் ரஹ்மத் பவுண்டேஷனின் வேலை திட்ட ஒருங்கிணைப்பு செயலாளருமான சப்ராஸ் மற்றும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களான ஜெமீல் முபாஸ்,அஸ்லம்,இஸ்மத்,பாயிஸ்,இம்தியாஸ் ,ரியாஸ்,ரஹீம் அவர்களுக்கும் பவுண்டேஷன் சார்பாக தனது விஷேட நன்றியினை ரஹ்மத் மன்சூர் இதன் போது தெரிவித்தார்.
No comments