கடையாமோட்டை தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைத்து கொடுக்க அஷ்ரப் ஆசிரியர் நிதி உதவி
கடையாமோட்டை தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான துவிச்சக்ர வண்டி தரிப்பிடம் ஒன்று காணப்படாத குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக பாடாசாலையின் பல அபிவிருத்தியின் பங்காளியாகவும், கற்றல், கற்பித்தலில் சிறந்த ஆசிரியருமாகிய ஏ.ஏ. அஷ்ரப் ஆசிரியர் அவர்கள் தனது சகோதரர்களின் ஒத்துழைப்புடன் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான 100x17 நீளமான துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் (Byceycle Park) அமைத்து கொடுக்க நிதி உதவி வழங்கியுள்ளார்.
இந்நிதி உதவியை தேசிய கல்லூரியின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அதிபர் அவர்களிடம் கையளித்தார்.
குறித்த திட்டத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்றுவருகின்றது.
அல்லாஹ்தஆலா அஷ்ரப் ஆசிரியரினதும், அவருடைய சகோதர்களினதும் பணியை பொருந்திக் கொண்டு இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி வாழங்குவானாக! அவர்களுடைய செல்வத்தில் பரகத் செய்வானாக ஆமீன்.
K.N.C.MEDIA UNIT
No comments