Breaking News

தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இந்தியாவின் ஈ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமமும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சி வகுப்பு!

மாளிகைக்காடு நிருபர் 

இந்தியாவின் ஈ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் ISTE (Indian Society for Technical Education, New Delhi) ஆதரவுடன் இந்தியாவில் துறை சார்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான ஒரு வாரகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இந்தியாவில் ஈ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் 2 பயிற்றுவிப்பாளர்கள்  மற்றும் 16 இயந்திரவியல் மாணவர்கள் ஒன்லைன் (online) மூலம் ஒரு வாரகாலம் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.


 தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், ஒருவாரகால வகுப்பினை துவக்கி வைத்தார். பயிற்சியில் இயந்திரவியல் துறை சார்பான புதிய கண்டுபிடிப்புக்கள் அதீ நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் அதன் அவசியம் மற்றும் ஆராச்சி முடிவுகளை இந்தியா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள பேராசிரியர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.


தென்கிழக்குப் பல்கலைக்கழக இயற்பியல் துறை தலைவர் கலாநிதி யூ.பாரூக் அவர்களும் கலந்துகொண்டு செராமிக் தொழில்நுட்பம் பற்றி விரிவாக விளக்கமளித்தார். இந்த ஒருவாரகால பயிற்சி வகுப்பினை, தொழில் மற்றும் வெளிநாட்டுத்துறை இயக்குனர் கலாநிதி சிவராமன், கலாநிதி ராமானுஜம் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். ஈ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமத்தின் செயலாளர் கலாநிதி எஸ்.பரமேஸ்வரன், முதல்வர் கலாநிதி ராமபாலன்,பேராசிரியர் சின்னத்துரை மற்றும் பேராசிரியர் கிருஸ்னமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கினர்.





No comments

note