சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுத்தார் லசித் மாலிங்க
சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுத்தார் உலக புகழ் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இன்று அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
எனினும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கும் கிரிக்கட்டை உயிராக மதிக்கும் சகல தரப்புக்களுக்கும் 100 % ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு உலக சாதனைகளுக்கு உரிமை கோரும் லசித் மாலிங்க தாய்நாட்டின் கடந்த கால கிரிக்கெட் வெற்றிகளுக்கு திருப்பு முனையாக விளங்கினார்.
இச்செய்தியில் தனக்கு உதவிய கைகொடுத்த அனைவருக்கும் இரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்ள லசித் மாலிங்க தவறவில்லை.
No comments