சாணக்கியன் முழங்கினார் பாராளுமன்றம் அதிர்ந்தது
20க்கு வாக்களித்த கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் ஊருக்கு வந்தால் செருப்பினால் அடியுங்கள்
தமிழ் கிறிஸ்தவ முஸ்லிம் சமூகங்களை அல்லாஹ்வை நிந்திக்கும் ஞானசார தேரரை கைது செய்யுங்கள்.
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி அல்லாஹ் என்பதை நீதியமைச்சர் ஏற்றுக் கொள்கிறீர்களா ?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முழக்கம்.
அப்பாவி ஆசிரியர்கள் வைத்தியர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள்
ஆனால் முஸ்லிம்களின் ஏக இறைவனை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி எனவும்
நாட்டில் 500 கிறிஸ்தவ அடிப்படைவாத தேவாலயங்கள் இருப்பதாகவும் இந்து மதத்தில் கைகளை வெட்ட சொல்லி நாட்டுக்கு தீ வைக்கும் ஞானசார தேரரை இவர்கள் கைது செய்வதில்லை.
நாட்டில் முஸ்லிம்கள் இம்சிக்கப்படுகிறார்கள் அசாத் சாலி ரிசாத் பதியுதீன் ஆகியோர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த நாட்டின் நீதி அமைச்சராக ஒரு முஸ்லிமே இருக்கிறார் அமைச்சர் அவர்களே ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி
அல்லாஹ்வா? இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ?
நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலும் குண்டுகள் வெடிக்கலாம் என ஞானசார தேரர் கூறுகிறார் ? இவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை அவர் ஜனாதிபதியின் உத்தியோகப்பற்றற்ற செயலாளர் என்பதாளா?
20க்கு கைதூக்கிய கிழக்கின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
கிழக்கு மாகாண மக்களே 20 இற்கு கைதூக்கி அங்கீகரித்த இவர்கள் வந்தால் செருப்பினால் அடியுங்கள்.
No comments