Breaking News

நீர்கொழும்பு அல் ஹிலாலில், நீண்ட காலத்திற்குப் பின் சிறந்த பெறுபேறு

-இஸ்மதுல் ரஹ்மான்- 

நீர்கொழும்பு அல் ஹிலால் தேசிய பாடசாலையில் நீண்ட காலத்திற்குப் பின் இம்முறை தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன.


2020 க.பொ.த. சாதரண தர பரீட்சை முடிவுகளின்படி இம்முறை 3 மாணவர்கள் 9ஏ சித்தியும், 4 மாணவர்கள் 8ஏ சித்தியையும், 7ஏ சித்தியை 2 மாணவர்களும் பெற்றுள்ளனர்.


தமிழ் மொழி மூலம் தோற்றிய 97 பேரில் 64 பேர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். சிங்கள மொழி மூலம் தோற்றிய 39 பேரில் 17 பேர் சித்தி அடைந்துள்ளனர் என அதிபர் எம்.எஸ்.எம். சஹீர் தெரிவித்தார்.


ஏ.எம். அஸ்பாக், எம்.எஸ். ஹுஸ்னுன் நிதா, எம்.ஐ.எப். பர்ஹா ஆகியோர் 9ஏ யும் எம்.ஏ.ஐ.அப்ரின், எம்.எல்.எப்.சஹ்லா, ரி.எப். முஸ்பிக்கா ஆகியோர் 8ஏ 1பி யும், எம்.எப்.எப்.ஆத்திக்கா 8ஏ 1சி யும், எம்.ஆர்.எப். பர்ஹத், எஸ்.எப். அம்னா ஆகியோர் 7ஏ 1பி 1சி யும் பெற்றுள்ளனர். 


சிங்கள மொழி மூலம் எம்.எப்.எப். பஸ்ரா 4ஏ 5பி பெற்று சிங்கள மொழியில் பாடசாலை யின் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.


பாடசாலை வரலாற்றில் நீண்ட காலத்திற்குப் பின் கிடைத்த சிறந்த பெறுபேறாகும்.  அண்மையில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பின் கிடைத்த இப்பெறு பேறு பாடசாலை சமூகத்திற்கு உச்சாகத்தை ஊட்டியுள்ளது.


கடந்த வருடம் பாடசாலை நூற்றான்டு விழாவை கொண்டாடியதன் ஊடாக பழைய மாணவர்கள் பாடசைலைக்குள் ஈர்க்கப்பட்டதன் மூலம் கல்வி முன்னேற்றத்திற்காக பல அபிவிருத்தித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி கூட்டாக செயல்பட்டதன் பயனை பாடசாலை அடைந்துள்ளது.


கொரோனா கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆசிரியர்களின் குறுகிய கால வழிகாட்டலில்  சித்தியடைந்த அணைத்து மாணவர்களுக்கும் அதிபர் சஹீர் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் இச் சிறந்த பெறுபேறை பெற்றுக்கொள்ள உடந்தையாக இருந்த ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க, மாணவியர் சங்க உறுப்பினர்கள், நலன்பிரும்பிகள் அணைவர்களையும் அதிபர் நன்றியுடன் நிணைவுகூர்ந்தார்.





No comments

note