Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் எம்.பிக்கு மாதுளை மரக்கன்று அன்பளிப்பு.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராக எம்.எஸ்.தௌபீக் எம்.பி. நியமனம் பெற்றதிலிருந்து பல மாவட்டங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு கட்சி புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.


அந்தவகையில் நேற்று (20) புத்தளம் மாவட்டம் விஜயமேற்கொண்டிருந்தார்.  கொத்தான்தீவு கிராமத்திற்கு சென்றிருந்த போது கொத்தான்தீவு மு.கா.அமைப்பாளர் எஸ்.ஆர்.எம்.பதுர்தீன் அவர்களினால் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட மாதுளை மரக்கன்றொன்றை அன்பளிப்பு செய்ததோடு இம்மரக்கன்றை நன்றாக வளர்க்க வேண்டும் என்றும் எமது கட்சியின் சின்னமான மரத்தையும் நீங்கள் வளர்க்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.


இவ்விஜயத்தின் போது தேசிய அமைப்பாளருடன் புத்தளம் நகர சபை உறுப்பினரும், மு.கா.உயர்பீட உறுப்பிருமான ஏ.என்.எம்.ஜௌபர் மரிக்கார், மற்றும் உயர்பீட உறுப்பினரான பாரூக் பதீன் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.









1 comment:

  1. Masha Allah வித்தியாசமான நல்ல முயற்சி பாராட்டப்படவேண்டிய செயற்பாடாகும். திடீர் விஜயம் எப்படித்தான் மரம் வந்ததோ தெரியாது போகுமிடமெல்லாம் மரம் வளரவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன் ஆளுமையுள்ள மாற்றத்திற்கான தேசிய அமைப்பாளர் பதவியை அலங்கரித்து செயல்வடிவில்போராளிகளுக்கு ஊக்கமும் வழங்கிவரும் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக்( பாஉ) அவர்களை வாழ்த்துகின்றேன்

    ReplyDelete