Breaking News

சுகாதாரத்துறையினருடன் பாதுகாப்பு துறையினர் இணைந்து சாய்ந்தமருதில் நடமாடும் தடுப்பூசி நடவடிக்கை!

நூருல் ஹுதா உமர் 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு துறையினரும் இணைந்து இன்று (27) சாய்ந்தமருது பிரதேசத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாத நபர்கள், தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசியினை பெற முடியாதவர்களுக்கான தடுப்பூசி வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. 


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம நிலைதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.







No comments