Breaking News

ராஜா மகேந்திரனின் மறைவினால் அதிர்ச்சியும், கவாலையும் அடைந்தேன் - மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்.

இலங்கையில் தனியார் இலத்திரனியல் ஊடகத்துறையில் முன்னணி வகித்தவரும், பிரசித்தி பெற்ற கெப்பிடல் மஹாராஜா குழுமத்தின் தலைவருமான கிளி மகேந்திரன் என்றழைக்கப்படும் ஆர். ராஜா மகேந்திரனின் மறைவு குறித்து தாம் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாக அவரது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.


 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

 

இலங்கையில் 1938ஆம் ஆண்டு காலப் பகுதிலிருந்து மிகவும் பிரபல்யமடையத் தொடங்கிய மஹாராஜா நிறுவனத்தை தலைசிறந்த தொழில் முயற்சியாண்மையாளர் என்ற வகையில்,  பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு குழுமமாக கட்டியெழுப்பி அதனைப் பலமாக வேரூன்றி வியாபிக்கச் செய்வதில் ராஜா மகேந்திரனின் பங்களிப்பு மகத்தானது. 


இலத்திரனியல் ஊடகத்துறையில் கால் பதித்ததிலிருந்து அவர் புகழேணியின் உச்சத்திற்கே சென்றுவிட்டபோதிலும், தன்னை அடையாளப்படுத்திக்  கொள்ளாது, இலை மறை காயாக இருந்து கச்சிதமாக  நிலைமைகளைக் கையாள்வதில் கிளி மகேந்திரன் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தார். 


ஊடகங்களில் முகம் காட்டுவதையும், பொது வெளியில் காட்சியளிப்பதையும் தவிர்த்துக் கொள்ளும் தனித்துவமான மனப்பக்குவம் அன்னாருக்கு இயல்பிலேயே வாய்த்திருந்தது.


அன்னாரின் மறைவு, கெப்பிடல் மஹாராஜா குழுமத்திற்கும், எம்ரீவி மற்றும் எம்பீசீ ஊடகவலையமைப்பின் சிரச, சக்தி, மற்றும் ரீவி 1 ஆகியவற்றிற்கும் மட்டுமன்றி, நாட்டில் வாழும் சகல சமூகங்களுக்கும் பேரிழப்பாகும். அவர் இன, மத, மொழி பேதங்களின்றி அனைவருக்கும் உதவினார்.


அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், குழுமத்தினருக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.


இவ்வாறு அவரது அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


It is deeply saddening to note the news of the passing of R. Rajamahendran, Chairman of Sri 

Lanka’s leading media group, The Capital Maharaja Holdings (Pvt).Ltd, including MTV / 

MBC Media Network, says Sri Lanka Muslim Congress Leader, and Member of Parliament 

Rauff Hakeem. Also known as ‘Kili’ Mahendran, the media moghul of contemporary times Raja mahendran’s passing comes as a news too sudden and saddening to bear, he added. 


SLMC Leader, Rauff Hakeem further stated that Rajamahendrans led the Capital Maharaja 

groups to achieve incredible stature in Sri Lanka’s history of mass media. 


Rajamahendran leaves behind a great legacy that generated many media ventures. He was a media baron and a skilled-silent achiever who had immense influence over the populace and remained 

peerless in his legacy in the creation of Sirasa, Shakthi and TV 1. 


Rajamahendran was also known for his philanthropy and immense contribution to 

transparent and open media culture that truly served as a voice to the voiceless. He was too 

unassuming and self effacing and always remained behind the scenes, stated Mr Hakeem.


SLMC Leader Rauff Hakeem conveys his condolences also on behalf of Sri Lanka Muslim Congress to Rajamahendran’s family, the staff of The Capital Maharaja holdings, its subsidiaries and all his loved ones in their bereavement.



No comments