Breaking News

கொழுப்பில் புலிகள்... குண்டு லொறியுடன்... தெறித்து ஓடுகிறார்கள் சிங்களவர்கள்... நடந்தது என்ன...?

[தொடர்-03]

மற்றுமொரு சம்பவம். புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக...


கொழும்பில் உள்ள சிங்கள மக்களை கடும் அச்சத்துக்குள் தள்ளிய சம்பவம்.


சிலர் வேறு இடங்களுக்கு ஓடவும் செய்தனர்.


என்ன அது...?


நிரம்பி வழிகிறது ரயில் நிலையம்.சொந்த ஊர்களுக்குத் தப்பி ஓடும் மக்கள் கூட்டம் அது.எல்லா இன மக்களும்தான் அங்கு.


அவர்கள் உண்பதற்கு உணவில்லை.கெண்டீனிலும் எதுவும் இல்லை.சமைத்துக்கொடுப்பதற்கும் பொருட்கள் இல்லை.


எல்லாம் காலி.பசியால் அத்தனை பேரும்...


எல்லோர் முகங்களிலும் அச்சம்.வயிற்றில் பசி.


பசியை விட உயிர்தான் முக்கியம்.ரயில் வந்தால் போதும்.தப்பியோடுவதற்கு...


அதுதான் அவர்களின் பிரார்த்தனை.


கூடவே பாதுகாப்புக்கு பொலிஸாரும் இராணுவமும் அங்கு.


சூழவுள்ள கட்டடங்கள் எல்லாவற்றிலும் தீ.தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் எல்லாம் சாம்பல்.


திரும்பும் திசையெல்லாம் புகை மண்டலம்.ரயில் நிலையத்தை ஊடறுத்துச் செல்கிறது அது.


கரு மேகமாய் புறக்கோட்டை...


ரயில் நிலையம் முன்பாகவும் ஒரு கூட்டம்.அதுவும் பயணிகள் கூட்டம்.கூடவே இராணுவமும்.


இப்படியே இருக்கையில்...ஒரு சத்தம்.


'' இந்தா புலி வந்துட்டானுகள்.புலி வந்துட்டானுகள்.''


ரயில் நிலையத்திற்கு எதிர்த் திசையில் இருந்துதான் அந்தச் சத்தம்.


அங்கு நிற்கிறது ஒரு கூட்டம்.அவர்கள் சிங்களவர்கள்.கத்துபவர்கள் அவர்கள்தான்.


ஓடி வருகிறார்கள்.ரயில் நிலையத்தை நோக்கி...எரியும் கட்டடம் ஒன்றை சுட்டிக்காட்டியவாறு...


பார்க்கிறார்கள் படையினர் அந்தக் கட்டடத்தை.ஆம்...சிலர் அங்கே.ஆயுதங்களுடன்...சீருடையுடன்...


மங்களாகத்தான் தெரிகிறது அந்தப் புகையில்...


இராணுவம் இப்போது தயார்.தாக்குதல் நடத்துவதற்கு...கீழே எல்லோரையும் படுக்குமாறு கூறிவிட்டு...


எல்லோரும் வீழ்ந்து படுக்க எம்புகிறது வெடில்...அந்தக் கட்டடத்தை நோக்கி...


பதிலுக்கு அவர்களும் அங்கிருந்து...நடக்கிறது சண்டை சிறிது நேரம் இப்படியே...


வெடிச் சத்தத்தோடு சேர்ந்து எழுகிறது மக்களின் ஒப்பாரியும்.ரயில் நிலையத்துக்கு உள்ளே இருந்து..  


மரண பயம் இப்போது எல்லோருக்கும்...


ஐந்து,நிமிடங்கள்தான் அந்தச் சண்டை.அப்படியே நிற்கின்றன வெடிச்ச சத்தங்கள்.இரண்டு பக்கங்களிலும்...


அப்படியே மெல்ல எழும்புகிறார்கள் படையினர்.கூடவே பயணிகளும்..ரயில் நிலையத்துக்கு உள்ளே ஓடுகிறார்கள் பயணிகள்.


 தணிகிறது மக்களின் பயம்.சற்று நேரம் கழித்து...


காரணம்...? அவர்கள் புலிகள் அல்ல.இராணுவம்தான்.பின்னர்தான் தெரிய வருகிறது.


எரிகின்ற அந்தக் கட்டத்துக்குள் யாரும் சிக்கி உள்ளார்களா என்று தேடிப் பார்ப்பதற்காகவே அங்கு செல்கிறார்கள் படையினர்.


அவர்களை கண்ட சிலர் புலிகள் என்று நினைத்து கத்திக்கொண்டு ஓடியதால்தான் இந்தக் குழப்பம்.


ஆனால்,முக்கியமான விடயம் என்னவென்றால் இந்தச் செய்தி உடனே கொழுப்பு முழுவதும் பரவியதுதான்...தீயை விடவும் வேகமாக...


எங்கு சென்றாலும் அதே கதைதான்.புறக்கோட்டையில் புலிகளாம்.


புறக்கோட்டையில் புலிக்கும் படையினருக்கும் இடையில் சண்டை.இரு தரப்பிலும் அதிகமான மரணங்கள்.புலிகளின் குண்டு லொறி கொழுப்பு நோக்கி வருகை...


இப்படித்தான் பரவுகிறது அந்த வதந்தி...


சிங்களவர்கள் இடம்பெயரவும் செய்தார்கள்.பிறகுதான் தெரிய வருகிறது உண்மை அவர்களுக்கு...


இருந்தாலும்,புலிகள் கொழுப்புக்கு வந்து தாக்குதல் நடத்துவார்கள் என்றே நம்பினார்கள் சிங்களவர்கள். கொழும்பில் அவ்வளவு அழிவு தமிழர்களுக்கு...


இதற்குப் பலிவாங்க எப்படியும் புலிகள் வருவர் என்றே நம்பினர்.அதுதான் சடாரென நம்பினர் வதந்திகளை...


பொலிஸாரும் இந்த வதந்தியை நம்பினர்.வித்தியாசமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார்கள்.


கிருளப்பனை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் பொலிஸ் சீருடை அணியவில்லை.சிவில் ஆடைகளுடன் அவர்கள்.


ஒருவேளை புலிகள் வந்தால் தாங்கள் சிவிலியன்கள் என்று சொல்ல முடியுமே...


வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில்...? வேறு விதமான  ஏற்பாடு.


அங்கு ஒரு பெரிய மரம்.அதிகமான பொலிஸார் அதற்கு மேல்தான்.அந்த இரவு.


இப்படித்தான் அஞ்சி நடுங்கியது கொழும்பு...


ஆனால்,புலிகள் வரவுமில்லை தாக்குதல் நடத்தவுமில்லை.


கொழும்பில் நடந்த சம்பவங்களுள் ஒன்று.இது.இப்படி இன்னும் பல..


அதிலும் கொடூரம் என்ன தெரியுமா...?


இதற்கு மறுநாள் அந்த நிலையத்துக்குள் நடந்த படுகொலைதான்...


எரித்துக் கொள்ளப்படுகிறார்கள் 9 அப்பாவித் தமிழர்கள்.


விரிவாகப் பார்ப்போம் நாளைய தொடரில்...


[ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக்]



No comments