தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக தெரிவான எஸ். சப்ராஸ் நவாஸ் அவர்களுக்கு கல்முனை மாநகர சபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் வாழ்த்துச்செய்தி
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் தலைவர் சகோதரர் எஸ். சப்றாஸ் நவாஸ் முகாமைத்துவத் தகவல் தொழில்நுட்பத்தில் பேராசிரியராகப் (Professor in Management and Information Technology) பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதை இட்டு நான் பெருமிதம் அடைவதோடு எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
இவர் முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்பத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் இவர் இப்பீடத்தின் இளம் பேராசிரியராகத் தனது 42 வது வயதில் பதவியுயர்வு பெறுவதோடு இலங்கையில் இத்துறையில் பேராசிரியர் பதவியைப் பெற்றுக்கொள்ளும் முதலாவது முஸ்லிம் என்பதை இட்டும் மிகவும் சந்தோசப்படுகின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இவர் தனது ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கான விருதுகளை மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் பெற்றுக் கொண்டதோடு கடந்த வருடம் ஐக்கிய ராச்சியத்திலுள்ள உலகப்புகழ்பெற்ற Emerald Publishing நிறுவனத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட தனது ஆய்வுக் கட்டுரைக்கு சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான விருதையும் பெற்றிருந்தார் என்பதையும் கடந்த காலங்களில் அறிந்திருந்தேன்.
மேலும் பல உயர்வுகள் பெற்று எம் மண்ணுக்கு புகழையும் எம் மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும் வழங்க வேண்டும் என பிராத்திக்கின்றேன்.

No comments