Breaking News

புத்தளம் புதிய நகர பிதா எம்.எஸ்.எம். ரபீக் உத்தியோகபூர்வ பதயேற்கும் நிகழ்வு

புத்தளம் நகர சபையின் புதிய நகர பிதாவாக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.எஸ்.எம். ரபீக் அவர்கள் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு சர்வ மதத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (05) புத்தளம் நகர சபை வளாகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், நகர பிதா எம்.எஸ்.எம். ரபீக், உப நகர பிதா சுசந்த புஷ்பகுமார, நகர சபை உறுப்பினர்கள் உட்பட நிருவாக அதிகாரிகள்  மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் இந்நிகழ்வில் மறைந்த  மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களை கௌரவிக்கும் வகையில் நகர சபையின்  அழைப்பை ஏற்று கௌரவ அதிதிகளாக முன்னாள் நகர பிதா மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் புதல்வி ஷதா பாயிஸ் மற்றும் புதல்வர் பராஜ் பாயிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



















No comments