சபாநாயகர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை நிராகரித்தார்?
ஐக்கிய மக்கள் சக்தியினால், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில், திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது ஏன சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமான சந்தர்ப்பத்தில், சபாநாயகர் இதனை அறிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது, முழு அமைச்சரவைக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையாக திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க நேற்று (19) சபையில் கோரியிருந்தார்.
உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (20) மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments