Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் தடம் பதித்தார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ்

✍️ ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் வரலாற்றில்  பொன் எழுத்துக்களால் தடம் பதித்தார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ்.


     

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடலாவிய ரீதியில் 1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் எமது பாடசாலை உள்வாங்கியதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். "அல்ஹம்துலில்லாஹ்"



இருப்பினும் இவ்வெற்றி வெறுமனே கிடைத்த ஓர் வெற்றியல்ல, இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கு முன்னெடுப்புகள் செய்த போது பல்வேறு கழுத்தறுப்புக்களும், காய் வெட்டுக்களும் நடந்த போதெல்லாம் என்ன இன்பங்கள், துன்பங்கள் வந்தாலும் ஒரே ஒரு குறிக்கோளாக தனது பாடசாலை, தான் கற்ற பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு கஷ்டங்களையும், துன்பங்களையும் சந்தித்து இவ்வெற்றியை பெற்றுத் தந்தவர் கௌரவ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  ஏ.எச்.எம்.றியாஸ். 



எனவே இதற்காக அல்லாஹ்தஆலா அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் நற்கூலியை வழங்க வேண்டும் என பிரார்திக்கின்றேன்.



எமது பாடசாலையை இத்திட்டத்திற்கு உள்வாங்கிய கௌரவ அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷா, கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷா, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் பணிப்பாளர் டப்ளிவ்.ஜே. விஜயசிங்க, திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.எம்.ஐ.எம். அலிஜின்னா, கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம். அருஜுனா, தெற்கு கோட்ட மட்ட கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ் ஆகியோருக்கு இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.



அது மாத்திரமல்லாமல் கடையாமோட்டை பாடசாலையின் வரலாற்றை நாம் எடுத்து நோக்குவோமானால் இப்பாடசாலை 1928 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 92 வருடங்களை கடந்திருந்தாலும் அதனை நான்கு கட்டங்களாக நாம் அதனை வகுத்து நோக்கலாம்.




1.முதல் கட்டம் இப்பாடசாலை மகா வித்தியாலயமாகியது.



2.இரண்டாவது  கட்டம் இப்பாடசாலை நவோதய திட்டத்தில் உள்வாங்கப்பட்டது. 



3.மூன்றாவது கட்டம் இப்பாடசாலை அன்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டம்.



4.நான்காவது கட்டம் தேசிய பாடசாலை திட்டம்.



முதலாவது இப்பாடசாலையை மகா வித்தியாலயமாக்குவதற்கு 1991 ஆம் ஆண்டு மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர் (முன்னாள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்) அவர்களின் உதவியுடன் அன்றைய பழைய மாணவராகவும், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினராகவும் இருந்த ஏ.எச்.எம்.றியாஸ் அவர்களின் பாரிய முயற்சியினால்  இப்பாடசாலை அன்று மகா வித்தியாலயமாகியது. இக்காலகட்டத்தில்  அதிபராக எஸ்.எம். தல்ஹா அவர்கள் பங்களிப்பு செய்தார்.



இரண்டாவது இப்பாடசாலையை நவோதய பாடசாலையாக 1997ஆம் ஆண்டு அமரர் யூஸஸ் பீரிஸ் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் ஒத்துழைப்புடன் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.றபீக் அவர்களின் அயராத முயற்சியினால் இப்பாடசாலை நவோதய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இக்கால கட்டத்தில் இப்பாடசாலையின் அதிபராக எச்.ஏ. முஹ்தார் பங்களிப்பு செய்தார்.



மூன்றாவது கட்டம்  2012ஆம் ஆண்டு முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் திட்டத்திற்கு அமைய  அன்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் இப்பாடசாலை  உள்வாங்கி மகிந்தோதய கூடத்தை வழங்கி எமது பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவை ஆரம்பித்து இப்பிராந்தியத்தில் வரலாற்று ரீதியான கல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் அவர்கள் அதன் மூலம் இப்பிராந்தியதிற்கு இதுவரையில் ஆறுக்கு மேற்பட்ட வைத்தியர்களையும், ஏனைய விஞ்ஞானப் பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமை அவரயே சாரும். இக்கால கட்டத்தில் அதிபராக எம்.எஸ்.எம். ஸஹீர் பங்களிப்பு செய்தார்.



நான்காவதாக எமது பாடசாலையில் விடுபட்ட அபிவிருத்திகளை நிரப்புவதற்காக எமது முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  ஏ.எச்.எம்.றியாஸ் அவர்களின் கனவில் உதித்த தேசியத்திற்கு ஒரு பாடசாலையாக அதன் 92 ஆவது வயதில் நனவாக்கியிருக்கிறார். இக்கால கட்டத்தில் அதிபராக எம்.எச்.எம்.தௌபீக் பங்களிப்பு செய்தார்.



எனவே இவரது இப்பாரிய முயற்சியை அல்லாஹ்தஆலா ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இவருக்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என்றும் நன்றி உணர்வோடு செயற்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.




நன்றி

ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்

கடையாமோட்டை தேசிய பாடசாலை




No comments