Breaking News

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக மௌலவி மல்ஹர்தீன் ரஷீதி நியமனம்

ஏறாவூரின் சமூக  சேவையாள‌ரும் நேர்மையான அரசியல் சிந்தனையாளருமான மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரை வசிப்பிடமாக கொண்ட மௌலவி கா.மு. மழ்ஹர்தீன் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக  க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதினால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.


இவ‌ர் ஏறாவூர் நகர சபையின்  ஊழியராகவும் பகுதி நேர சிங்கள மொழி ஆசிரியராகவும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் சிங்கள மொழி மூலம்  உரை நிகழ்த்தும் மௌலவி குழாமில் ஒருவராகவும் செயற்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.


 நாட்டிலுள்ள‌  க‌ட்சிக‌ளில் ம‌க்க‌ளை அர‌சிய‌லின் பெய‌ரால் ஏமாற்றாம‌ல் உண்மையாக‌வும், நேர்மையாக‌வும் செய‌ற்ப‌டும் தலைமையை கொண்டிருக்கும்  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் (உல‌மா) க‌ட்சியின்  நீண்ட‌கால‌ ப‌ல‌ நேர்மையான‌ செய‌ல்பாடுக‌ளை பார்த்த‌ பின் அக்க‌ட்சியில்  இணைந்து செய‌ற்ப‌டுவ‌த‌ன் மூல‌மே ச‌மூக‌த்துக்கு ந‌ல்ல‌தொரு அர‌சிய‌ல் பாதையை காட்ட‌ முடியும் என்ப‌தை உண‌ர்ந்து ஐக்கிய‌ காங்கிர‌சில் இணைந்து கொண்ட‌தாக‌ மௌலவி கா.மு. மழ்ஹர்தீன்  தெரிவித்துள்ள‌ர்.




No comments