'கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடம்' என பெயர் மாற்றம்.
புத்தளம் நகர கேட்போர் கூடத்திற்கு 'கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடம்' என பெயர் மாற்றம்.
புத்தளம் நகர சபை தலைவர் சுசந்த புஷ்பகுமார மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில், மறைந்த முன்னாள் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஞாபகார்த்தமாக, புத்தளம் நகர கேட்போர் கூடத்திற்கு 'கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதன் வைபவ நிகழ்வுகள் கொரோணா பரவல் காரணமாக இன்று (29) மிக எழிமையாக இடம்பெற்றன.
நகர சபை தலைவர் சுசந்த புஷ்பகுமார அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கே.ஏ. பாயிஸ் அவர்களின் புதல்வர் அஷ்ரப் பராஜ் பாயிஸ் அவர்களினால் பெயர்ப்பலகை திறைநீக்கம் செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் புத்தளம் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.









No comments