Breaking News

கல்முனையின் பாடும் நிலா காற்றில் குரலை பதித்து விட்டு இடைநடுவில் எங்களிடமிருந்து விடைபெற்று விட்டது ; சந்திரசேகரம் ராஜன் இரங்கல்.

மனித வாழ்வில் மரணம் இயற்கையான ஒன்று. அந்த இயற்கையையையும் சிலர் தன்னுடைய பெயரால் வென்றவர்கள் இருக்கிறார்கள். அப்படியானவர்கள் பட்டியலில் இன்று அமரத்துவமடைந்த நண்பர் சுதனும் ஒருவர். அவரின் இழப்பு எனக்கு மட்டுமல்ல இந்த நாட்டிலுள்ள கலை ரசனை கொண்ட ஒவ்வொருக்கும் இழப்பாகும். திடீர் மரணம் அவரை சந்தித்த போது ஸ்தம்பித்து நின்ற இசை இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் இரங்கல் வெளியிட்டுள்ளார். 


அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும், கல்முனை மண்ணின் பெயரை நாலாதிசைக்கும் பாடகர் சுதனாய் அடையாளப்படுத்திய நண்பர் சுதன் சிறந்த மனித மாண்பு மிக்கவர். வாயில்லா ஜீவன்களின் பசியறிந்து இறுதி நிமிடம் வரை உணவளித்த அவரது செயல் அவரின் உறவுகளையும் தாண்டி பல உயிரினங்களுக்கும் இன்று இழப்பை ஏற்படுத்தி உள்ளது. பாடசாலை கால நண்பராக இருந்த அவர் எனது தொய்வுநிலைகளின் போது ஆறுதலாக அமைந்த நாட்கள் என் கண் முன்னாள் வந்து போகிறது. நல்ல நண்பனை இழந்த சோகம் என்னுள் இன்று மாலை முதல் குடிபுந்துள்ளது. 


கல்முனையின் பாடும் நிலா காற்றில் குரலை பதித்து விட்டு இடைநடுவில் எங்களிடமிருந்து விடைபெற்று விட்டது. அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிராத்திப்பதுடன் அவரின் இழப்பினால் துயருற்ற குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆறுதல்கள் என குறிப்பிட்டுள்ளார்.




No comments