சகலருக்கும் நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க இந்த பெருநாளில் பிராத்திப்போம் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி வாழ்த்து செய்தியில் தெரிவிப்பு.
பாவங்கள், தீயன விலகி நல்லன பெருகும் நோன்புப்பெருநாளை இன்று கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சகலரும் தேக ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன். பலஸ்தீனில் இந்த புனிதமிகு காலத்திலும் நமது இறையில்லத்தை மீட்க இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் அந்த சகோதரர்களுக்கும், சிறிய வயதிலும் தமது கொள்கைக்காக போராடும் பலஸ்தீன சிறுவர்களுக்கும் இறைவன் வெற்றியை கொடுத்து நிம்மதியான வாழ்வை வழங்கிடவும், உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா நோயில் பீடிக்கப்பட்டு துயருற்றிருக்கும் அனைவருக்கும் இறைவன் நல்ல சுகத்தையும், பறக்கத்தையும் வழங்கிட எல்லோரும் கையேந்தி பிராத்திப்போம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே இந்த காலகட்டத்தில் ஒற்றுமை புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என இத்திருநாளில் முஸ்லிம்கள் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் அல்லாஹ்வுக்காக பல தியாகங்களைச் செய்து 30 நாட்கள் நோன்பிருந்து இன்று பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள். நாடு வளர்ச்சியடைய வேண்டுமாயின் நிலையான சமாதானம் இருக்க வேண்டும். அதில் இன ஒற்றுமை என்பது விசேட அம்சமாகும். இஸ்லாம் சமாதானத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றது. அதற்கான நாளாக இன்றைய தினத்தை அமைத்துக் கொள்வோம். என்பதுடன் உலகை அச்சுறுத்தும் கொரோனா உட்பட சகல தீங்கிகளிலிருந்தும் எம்மை காக்க சகலரும் துஆ செய்வோம். அத்துடன் சுகாதார வழிமுறைகளை பேணி எமது பெருநாளை கொண்டாடுவதன் மூலம் நாம் நம்மையும் நமது நாட்டையும் பாதுகாக்க முடியும். சகலரும் வீடுகளில் தமது இறை வழிபாடுகளை செய்து கொண்டு வீட்டிலையே பாதுகாப்பாக இருப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக பிரிவு
No comments