Breaking News

உளவியல் கற்கைகளுக்கான ஹார்ட்வொர்க் அகடமியின் பட்டமளிப்பு நிகழ்வு !!

நூருல் ஹுதா உமர் 

உளவியல் கற்கைகளுக்கான ஹார்ட்வொர்க் அகடமியின் பட்டமளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் அகடமியின் பணிப்பாளர் ரூமி அமித் அவர்களின் தலைமையில்  

நடைபெற்றது. 03 மாதங்களை கொண்ட  ‘உளவியல் மூலம் வாழ்க்கைத் திறன்களுக்கான சான்றிதழ் பாடநெறி’ மற்றும் 06 மாத ‘டிப்ளோமா  இன் ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சை ’’ ஆகியவற்றில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இந்நிகழ்வின் போது வழங்கிவைக்கப்பட்டது.  


இவ்விழாவில் களனி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை குற்றவியல் பேராசிரியர் டாக்டர் அனுஷா எடிரிசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக ஆசியா குற்ற அறக்கட்டளையின் குற்றவியல் மற்றும் குற்ற விசாரணை பணிப்பாளர் டாக்டர் பிரசன்னா மற்றும் கேம்பிரிட்ஜ் கெம்பஸ் நகர வளாக தவிசாளர் டாக்டர் சதுரா ஜெயசங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வின் பிரதம பேச்சாளராக டாக்டர் சப்ராஸ் சலீம் கலந்து கொண்டு ‘The Brand – YOU’ குறித்து உரை நிகழ்த்தினார். மேலும் பல முக்கியஸ்தர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.










No comments

note