ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் குருந்தயடியப்பா சியாரம் புனரமைப்பு
(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அஷ்ஷெய்யிது அஷ்ஷெய்க் வுராஹுத்தீன் குருந்தயடியப்பா வலியுல்லாஹ் அவர்களின் சியாரம் அமைந்துள்ள கட்டிடத் தொகுதி கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குறித்த கட்டிடம் நிறம் பூசப்பட்டு, அதன் நிலப்பகுதிக்கு மாபிள் கற்களும் பதிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு புனரமைப்பு செய்யப்பட்ட சியாரத்திற்கு நேற்று (18) விஜயம் செய்த அமைப்பின் தலைவரும் கல்முனை மாநகர பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், அதன் சுற்றுப்புற வளாகத்தை வெளிச்சமூட்டும் பொருட்டு, கோப்ரா எல்.ஈ.டி. மின்விளக்குத் தொகுதிகளையும் வழங்கி வைத்தார்.
இதன்போது விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் குருந்தயடியப்பா வலியுல்லாஹ் சியாரம் நிருவாகத்தினர் மற்றும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த சியாரத்திற்கு நீண்ட கால தேவையாகவிருந்த இப்புனரமைப்பு வேலைத்திட்டம் வை.எம்.எம்.ஏ. பேரவையின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments