Breaking News

மறைந்த விவேக்கின் நினைவாக காரைதீவில் மர நடுகை அஞ்சலி !

நூருல் ஹுதா உமர் 

மறைந்த தென்னிந்திய நடிகர் டாக்டர் பத்மஸ்ரீ விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கனவுக்கு உயிரூட்டும் முகமாகவும் காரைதீவு பிரதேச சபை வளாகத்தில் இன்று (19) காலை மரக்கன்று நாட்டப்பட்டது. 


இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கனவுக்கு உயிரூட்டும் முகமாக ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே இந்த மரநடுகை இடம்பெற்றது. 


மாதாந்த சபை அமர்வுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







No comments

note