Breaking News

ரஹ்மத் மன்சூரினால் கோணாவத்தை ஜும்ஆப் பள்ளிக்கு பொதுக்கிணறு வசதி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை, கோணாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு பொதுக்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


அமைப்பின் தலைவரும் கல்முனை மாநகர பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், நேற்று குறித்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து, இதனை பாவனைக்காக கையளித்தார்.


இதன்போது ரஹ்மத் மன்சூர் அவர்களின் சேவைகளுக்காக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.


மேலும், இதன்போது பள்ளிவாசல்களின் ஏனைய தேவைகள் குறித்தும் ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.


வை.எம்.எம்.ஏ. பேரவையின் அனுசரனையில் இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற ரஹ்மத் சமூக சேவை அமைப்பு, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமுள்ள பள்ளிவாசல்கள், கோவில்கள் மற்றும் விகாரைகளுக்கு பொதுக்கிணறுகளையும் குழாய் நீர் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments

note