கல்முனை மாநகரசபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூரினால் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஆரிபீன் பள்ளிவாசலுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் பெட் மற்றும் ஜனாஸா சன்தூக் என்பன வழங்கிவைப்பு
கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் எமது அம்பாரை மாவட்டத்தில் தன்னால் முடியுமான சில மனித நேய சமூக பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.
அதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் காணப்படும் பிரதேசங்களில் தன்னால் முடியுமான வாழ்வாதார உதவிகளையும் மனிதநேயப் பணிகளையும் செய்து வருகின்றனர்.
இதனடிப்படையில் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஆரிபீனுக்கு தேவைப்பாடாக இருந்த மிகவும் முக்கியமான இரண்டு வேலைத்திட்டங்களான ஜனாஸா குளிப்பாட்டும்பெட் மற்றும் ஜனாஸா சன்தூக் ஆகியவற்றை அவசரமாக நிவர்த்தி செய்து பள்ளிநிர்வாகத்தினரிடம் கையளித்து வைத்தார்.
இச்சேவைகளை YWMA அமைப்பினரின் உதவியுடன் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் நேரடி முழுநேர கண்கானிப்பில் நேரடியாக களத்தில் பயனாளிகளை இனம் கண்டு எமது மக்களுக்கு கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் செய்து வருகின்றார்.
இவரின் இவ்வுயரிய சேவை எமது இதர பிரதேசங்களுக்கும் அவர்களது தேவைகளை நாடி செல்லவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
மேலும் இவரின் இச்செயற்பாடு வெற்றிபெற வல்ல அழ்ழாஹ்விடம் பிராத்திப்பதோடு நின்றுவிடாமல் அவரது எண்ணங்களும் வெற்றிபெற அனைவரும் அழ்ழாஹ் விடம் பிராத்திப்போமாக ஆமீன்.
No comments