தேசியக்கொடியை அவமதித்த "அமேசனை" உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யுங்கள் : அரசுக்கு வேண்டுகோள் !
அபு ஹின்சா
இணைத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமொன்றான அமேசனானது, இலங்கை தேசியக்கொடி பொறிக்கப்பட்ட பாதணி மற்றும் காற்துடைப்பான்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ள விடயமானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நிறுவனத்தை இலங்கையில் தடைசெய்ய இலங்கை அரசு உடனடியாக முன்வர வேண்டும் என அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா வின் சார்பில் அவ்வமைப்பின் தவிசாளர் அல்ஹாஜ் யூ. எல். நூருள் ஹுதா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் அரசுக்கு பகிரங்க வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் குறித்த நிறுவனமானது தமது இணையத்தில் 20 அமெரிக்க டொலருக்கு குறித்த பாதணிகளையும் காற்துடைப்பானை 20.20 டொலர்களுக்கு விற்பனைக்கும் காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எமது நாட்டின் கொடியை இவ்வாறு அவதூறு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளதானது இலங்கையர்கள் அனைவரது மத்தியிலும் பெரிதும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வாரு நாடும் தமது தேசியக்கொடியை மரியாதைக்குரிய சின்னமாக கொண்டுள்ளன. அதே போன்றே இலங்கையர்களும் தமது தேசிய கொடியை மரியாதைக்குரிய விடயமாக கொண்டுள்ளனர். அவ்வாறான ஒன்றுக்கு அபகீர்த்தியை உண்டாக்கிய அந்த நிறுவனத்திற்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுத்து இலங்கையில் அவர்களின் தொழிற்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது மிகப்பெரும் தொகையை அபராதமாக விதிக்க இலங்கை அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments