Breaking News

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சமூர்த்தி திணைக்களத்தினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்கள் ஆரம்பம்.

(சர்ஜுன் லாபீர்,எம்

என்.எம் அப்ராஸ்)

"நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் மகுட வசகத்தினை அடிப்படையாகக் கொண்டு உலகம் பூராகவும் கொண்டாடப்படும் 110வது சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கல்முனை சமுர்த்தி வங்கி வலயப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறுபட்ட நிகழ்வுகள் இன்று(8) கல்முனைக்குடி சமூர்த்தி வங்கியின் முகாமையாளர் மேஸஸ் புவிராஜ் தலைமையில் கல்முனை கிரீன்பீல்ட் சமூர்த்தி வலய வங்கி காரியலயத்தில் நடைபெற்றது.


இன்றைய நிகழ்வில் மகளிர்களுக்கான ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை ஆரம்பம் செய்தல்

"திரியபியச"வீடுகளுக்கான காசோசலை வழங்கி வைத்தல்,

செளபாக்கிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டு விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு,

பாடசாலை மாணவர்களுகான "சிப்தொர" புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் பெண் சமூர்த்தி உத்தியோகத்தர்களை கெளரவிக்கும் நிகழ்வு போன்ற இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும்,மாவட்ட பதில் சமுர்த்தி பணிப்பாளர் வி.ஜெகதீசன், கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.சாலீஹ்,மருதமுனை- நற்பிட்டிமுனை வங்கி.முகாமையாளர் சட்டத்தரணி எம்.என் முபீன்,திட்ட முகாமையாளர் எம்.ஐ.நயீமா,சமூர்த்தி திட்ட பணிப்பாளர் எஸ்.ரிபாயா,உதவி முகாமையாளர்களான எஸ்.எல்.அஸீஸ்,எம்.ஐ.எம்.முஜீப்,சமூர்த்தி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.













No comments

note