Breaking News

பாலமுனைக்கு பொதுக்கிணறு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர்

மாளிகைக்காடு நிருபர்

கடந்த சில மாதங்களாக கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினர் இளம் முஸ்லிம் பெண்கள்  அமைப்பினரின் உதவியுடன் அம்பாரை மாவட்டத்தில் மனித நேய சமூக பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அதனடிப்படையில் பாலமுனை ஜனாஸா அடக்கஸ்தலத்தில் மிக நீண்டகால தேவையாக இருந்த மையவாடிக்கு குடிநீர் மற்றும் நீர்தாங்கி இல்லாத குறையை நிபர்த்தி செய்து கொடுத்ததுடன் கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் ஜனாஸா நலன்புரி வேலைத்திட்டத்திற்கு ஒரு தொகை அன்பளிப்பும் வழங்கி வைத்தார்.


அத்துடன் பாலமுனை மசாஹிருல் உலூம் அரபுக்கலாசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவைப்பாடாக காணப்பட்ட பொதுக்கிணற்றையும் உத்தியோகபூர்வமாக இந்நிகழ்வில் கையளித்ததுடன் நிகழ்வின் நினைவாக மரக்கன்றினையும் நட்டிவைத்தார். இந்நிகழ்வில் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









No comments

note