Breaking News

பலநோக்கு அபிவிருத்தி பயிலுனர்களுக்கான இரு வார கால பயிற்சி நெறி ஆரம்பம்.

(சர்ஜுன் லாபீர்)


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல் எனும் பிரதான தொனிப்பெருளின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான இருவார கால தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறி வழங்கும் ஆரம்ப நிகழ்வு பல்நோக்கு அபிவிருத்தி திணைக்கள பயிற்சி இணைப்பாளர் கேப்டன் கே.எம் தமீம் தலைமையில் இன்று(01) மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வி.ஜெகதீசன்,சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப்,கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நாஸீர், அவர்களும் கெளரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுனன்,பல்நோக்கு அபிவிருத்த திணைக்கள உதவி பணிப்பாளர் ஜிகான் காரியவசம்,

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் டி.ஜெ அதிசயரராஜ்,நைட்டா நிறுவன பிரதி முகாமையாளர் ஏ.மசூர்,நைட்டா, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர் எம்.அஸ்மி, தேசிய இளைஞர் படை இணைப்பாளர்களான பி.விவேகானந்தன்,பி.டினோஜினி, கல்முனை பிரதேச செயலக.கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல்.யாஸீன் பாவா,பல்நோக்கு திணைக்கள அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எம்.இர்சாத் உட்பட பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இந் நிகழ்வில் கல்முனை,கல்முனை தமிழ், நாவிதன்வெளி,சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய 7 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 158 பயிலுனர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்











No comments

note