Breaking News

பெருந்தகை வை.எம்.ஹனீபா அவர்களின் மறைவு மருதூர் மண்பதிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகிறது; அதாஉல்லா அஹமட் ஸகி

நூருல் ஹுதா உமர் 

சாய்ந்தமருதின் ஐக்கியத்திற்கும் ஒற்றுமைக்கும் விதை தூவி, தூய அரசியல் அரசியல் புரட்சியை முன்னெடுத்து தேசியத்தில் முன்னுதாரணமாய் திகழ்ந்த சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ். வை.எம். ஹனீபா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.  அவரின் கடந்த கால சமூகப் பெறுமானம் மிக்க முன்மாதிரி செயற்பாடுகளை அறிந்து அவர் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டிருந்தேன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் நான் இன்று (29) கலந்து கொண்ட வேளை,  மருதூர் மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் ஆழமான நேசத்தை கண்ணுற்றேன் என அக்கரைப்பற்று மாநகர சபை  முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் தந்து அறிக்கையில் 


அல்ஹாஜ். வை.எம்.ஹனீபா தம் வாழ்வின் பெரும் பகுதியை சமூகத்திற்கும், மண்ணுக்கும், மக்களுக்கும் என அர்ப்பணித்த வரலாற்று முதுசம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  அவர் நட்டுச் சென்ற ஆரோக்கியமான அரசியல் விதைகளை விருட்சமாக்கி மருதூர் மக்கள் இனியும் தொடர்ந்து செல்வர் என்பதே எமது பெருத்த நம்பிக்கை. அன்னாரின் பிரிவின் துயரத்தில் கவலை கொண்டிருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும்,மருதூர் மக்களுக்கும்,மற்றுமான அன்பர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் உயர் பொறுமையை வழங்க வேண்டும். மேலும், மருதூரின் முதுசம் வை.எம்.ஹனீபா அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர் சுவனப்பேறு கிடைக்க வேண்டி ஆத்மார்த்தமாய் பிராரத்திக்கின்றேன். என தெரிவித்துள்ளார்.




No comments

note