பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து பேச்சு!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், இன்று (09) பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.
இங்கு சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை பாகிஸ்தான் நாட்டின் பிரதி உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார்.
அத்துடன், விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இதன்போது உரையாடப்பட்டது.
 





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments