Breaking News

சிறப்பான விமர்சன பார்வையுடன் இரண்டு கவிதை நூல்களின் அறிமுகமும் நூல் வெளியீடு.

மருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய 

“ஆண் மழை பெய்யும் காலமும் பெண் வெயில் நடனமும்" "மன மைதுனம்"

கவிதை நூல்கள் அறிமுகமும் நூல் வெளியீடும் சனிக்கிழமை இன்று 

(27-02-2021) காலை 9.30 மணிக்கு மருதமுனை கலாசார மண்டபத்தில் மர்ஹும் கவிதாயினி கலைமகள் ஹிதாயா அரங்கில் 

ஜனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும், நல்லிணக்கத்திற்குமான நிலையத்தின் ஏற்பாட்டில்

கலாநிதி சத்தார் எம்.பிர்தெளஸ் தலைமையில் நடைபெற்றது.


இலக்கிய அதிதிகளாக கவிஞர் எழுத்தாளர் ஏ.பீர்முகம்மது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரதிப் பணிப்பாளரும் பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளருமான பசீர் அப்துல் கையூம்

கலந்து கொண்ட

இந்நிகழ்வின் இரண்டு நூல்களின் அறிமுகவுரையை கவிஞர் அம்ரிதா ஏயெம் நிகழ்த்த "மன மைதுனம்" நூலின் விமர்சனவுரையை கவிஞரும், விமர்சகருமாகிய சிராஜ் மஸ்ஹுர் நிகழ்த்தினார்.


“ஆண் மழை பெய்யும் காலமும் பெண் வெயில் நடனமும்" எனும் நூலின் விமர்சனவுரையை ஆசிரியரும் கவிஞருமாகிய கவிதாயினி பாத்திமா சூபா நிகழ்த்தினார்.


பிரமிளின் தேர்ந்தெடுத்த கவிதைத் தொகுதியுடன் ஒப்பிட்டு "மன மைதுனம்" நூல் பற்றி கவிஞர் சாஜித் ஒப்பிட்டாய்வு செய்து பேசவுள்ளார், அது போன்று நூலாசிரியரின் " பேரண்டக் கனவு" பிரதியுடன் “ஆண் மழை பெய்யும் காலமும் பெண் வெயில் நடனமும்" எனும் நூலை கவிஞர் குர்சித் ஒப்பிட்டாய்வு செய்தார்.


முதல் பிரதிகள் பெறுவோர்களாக கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.முகர்றப், அல்-ஹாஜ் எஸ்.எம்.றபாயுதீன், எம்.எச்.எம்.தாஜுத்தீன்

(சறோபாம்) சர்வதேச அரச சார்பற்ற நிறுவன ஆலோசகர் கலீல் கபூர், 

இலக்கிய அதிதிகள், இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்து நெறிப்படுத்தினார்கள்

கவிஞர் ஜமீல், ஏ.எம்.ஏ.ஹைதர், காணி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.ரஜாய் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.சினாஸ் ஆகியோர்.


(பி.எம்.எம்.ஏ.காதர், றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ், எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)














No comments

note