நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் , கணக்காளர் ஹபீபுல்லாவுக்கு வீடு தேடிச்சென்று கெளரவிப்பு..
(யு.எம்.இஸ்ஹாக்,சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலக கணக்காளர் அண்மையில் எழுதி வெளியிட்ட "நிதி முகாமைத்துவம் " நிதிப்பிரமாணங்களும் ,நிதி நடைமுறைகளும் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் கல்வியியலாளர்களை கெளரவப்படுத்தும் திட்டத்தின் கீழ் பெறுமதி வாய்ந்த இந்த நூலை வெளியிட்டு வைத்ததை முன்னிட்டு கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்வை அவரது வீடு தேடி சென்று வாழ்த்தி நினைவு சின்னம் , நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தனர்.
நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையிலான அமைப்பின் குழுவினர் நேற்று இரவு கணக்காளரின் வீட்டுக்கு சென்று இந்த பாராட்டு நிகழ்வை நடாத்தினர்.
பாராட்டைப் பெற்ற கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் அங்கு உரையாற்றுகையில் நான் பல மேடைகளில் பேசி இருக்கின்றேன் பல கருத்தரங்குகளை நடாத்தியிருக்கின்றேன் ஆனால் என்னை வீடு தேடிவந்து பாராட்டிய இந்த நிகழ்வு என் இதயத்தை நெகிழ வைத்துள்ளது . இதனை என் வாழ்வில் ஒரு போதும் மறந்து விட முடியாது. இதற்காக நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் அமைப்பினருக்கு உள்ளார்த்தமான நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் , அதிபர்களான வீ.எம்.ஸம்ஸம் ,ஏ.எம்.சாலிதீன் மௌலவி ,திருமதி ஏ.முனாஸிர்,ஆசிரியர் ஏ.எல்.அஷ்ரப் , அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயிஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
No comments