முஸ்லிம் மக்களின் உணர்வுக்கு மாற்றமாக தலைவர்கள்.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிகின்ற அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழர்களின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் உணர்வுகளுடன் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் முஸ்லிம் தலைவர்களில் சிலர் நேற்று ஆங்காங்கே சுதந்திரதின கொண்டாட்டம் நடாத்தி ஆட்சியாளர்களை புகழ்ந்தனர்.
இன்னும் சிலர் ஜனாதிபதியின் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொண்டு ஆட்சியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.
இது மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் மாற்றமான செயல்பாடாகும்.
எனவே மக்களின் உணர்வுகள் கள்ளம் கபடமற்றதாக இருக்கின்ற நிலையில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் சிலர் அரசியல் அதிகாரம் பற்றி கனவு காண்கின்றனர்.
மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள் அரசியலிலிருந்து நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டாதே வரலாறு ஆகும்.
முகம்மத் இக்பால்
No comments