Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் ஆப்தீன் எஹியா,பைஸர் மரிக்கார் ஆகியோரின் அபிவிருத்தி பணிகளின் அங்குரார்பண நிகழ்வு

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நீண்ட நாள் குறைபாடாக காணப்பட்ட ஒலி பெருக்கி தொகுதி (Intercom System) முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியாவால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

குறித்த திட்டமானது எஸ்.ஆப்தீன் எஹியாவின் வேண்டுகோளுக்கினங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதுர்தீன் அவர்களின் நான்கு இலட்சம் (4,00 000/=) ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று (03) வைபவ ரீதியாக எஸ்.ஆப்தீன் எஹியாவினால்  அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதேவேளை  மத்திய கல்லூரியின் காரியாலயத்திற்கு தேவையான  தளபாட வசதிகளுக்காக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்காரின் வேண்டுகோளுக்கினங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதுர்தீன் அவர்களின் இரண்டு இலட்சத்து என்பதாயிரம் (2,80 000/=) ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டு இன்று (03) கே.எம்.எம். பைஸர் மரிக்கார் வைபவ ரீதியாக கையளித்தார்.

கல்லூரியின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் கல்வி அபிவிருத்தி குழு செயலாளர் சீ.எம்.தாவூத்,  பிரதி அதிபர் டீ.எம். பாரி மற்றுமம்  ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது கல்லூரியின்  சார்பில் அதிபரினால்  இருவருக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

K.M.C.C. MEDIA UNIT























No comments

note