நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு !
நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை நோயாளிகளின் பாவனைக்கு தேவையான சக்கர நாற்காலிகள் (Wheelchairs) வழங்கும் நிகழ்வு நிந்தவூர் நலன்புரிச் சபையின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (11) நிந்தவூர் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் நிந்தவூர் நலன்புரிச் சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எம்.எச்.யாகூப் ஹஸன், அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் ஓய்வுபெற்ற விரிவுரையாளர் நசீர் அஹமது, நிந்தவூர் வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தரும் நிந்தவூர் நலன்புரிச் சபையின் பொதுத்திட்ட முகாமையாளருமான எம்.ஐ.உமர் அலி, அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளரும் மேலதிகச் செயலாளருமான எம்.ஐ.எம். ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஷகீலா இஸ்ஸதீன் மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்களிடம் சுமார் ஒரு லட்சத்தி இருதாயிரம் பெறுமதியான ஒன்பது சக்கர நாற்காலிகளை உத்தியோகப்பூர்வமாக கையளித்தனர்.
No comments