Breaking News

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் - புத்தளம் நகர சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றம்.

புத்தளம் நகர சபையின் இவ்வருடத்திற்கான முதல் சபைக் கூட்டம் நேற்று புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது,  இலங்கையில் தற்போது பூதாகரமாக இடம்பெற்று வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தகனம் செய்வதை நிறுத்தக்கோரியும், முஸ்லிம்களின் உடல்களை  நல்லடக்கம் செய்ய அனுமதி கோரியும் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும்,  இத்தீர்மானத்தை கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் அதேபோன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.










No comments