Breaking News

மாளிகைக்காடு பிரதேசத்தில் கொரனா தொற்று : ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பாடசாலைக்கும் பூட்டு.

நூருல் ஹுதா உமர், ஹாதிக் நப்ரீஸ்  

மாளிகைக்காடு பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் கொரனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவரோடு தொடர்பில் இருந்த 15க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பிரதேசத்தில் சிலருக்கு பீ சி ஆர் செய்யப்பட்டதில் எவருக்கும் தொற்று இல்லை என்று அறியப்பட்ட நிலையில் சில குடும்பங்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பாடசாலை ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.





No comments

note